அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை மார்ச் 25.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் வருகிற 27/03/2025 அன்று ஆண்டு விழா நடைபெற இருக்கிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதனை முன்னிட்டு 6, 7 ,8 வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லு பொறுக்குதல், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு சாக்கு ஓட்டமும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கபடி, ஆறாம் வகுப்பு பெண்களுக்கு ஊசி நூல் கோர்த்தல், ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கும் லெமன் ஸ்பூன் ,போட்டியும், எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு தண்ணீர் நிரப்புதல் போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசு வழங்கி பாராட்டப்படும் போட்டிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆசிரியர்கள் மணிமேகலை ரகமதுல்லா சிந்தியா உள்ளிட்டோ ஏற்படுதல் செய்துள்ளனர். மாணவர்கள் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் ஆடல் பாடல் நாடகங்கள் உள்ளிட்டவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. 

ஆண்டு விழாவில் மிகச் சிறப்பாக நடைபெறக்கூடிய ஆண்டு விழாவில் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ,துணைத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோ  கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments