வார்டு கவுன்சிலரின் அத்துமீறல்! - கண்டு கொள்வார்களா அதிகாரிகள்..!!
குழாய் இணைப்புகளில் பாரபட்சம் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் பொறுப்பாளர் திரு வெங்கடேஷ் அவர்கள் கூறுகையில்:-
ஜேசிபி இயந்திரம் கொண்டு பைப் லைன் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சில வீட்டிற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லும் குழாயிலிருந்து நேரடியாக சில பயனாளர்களுக்கு 1 inch பைப் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால் முறைப்படி நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் குழாயில் இருந்து தான் தண்ணீர் வினியோகம் அதுவும் 1/2 inchபைப் மூலமே தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பது விதி. அதை மீறி சில வீடுகளுக்கு ஒரு இன்ச் பைப் மூலமும் அதுவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் மெயின் பைப் தடத்த்தில் இருந்து நேரடியாக வழங்கப்படுவது தெரிகிறது.
இது பற்றி அந்த பஞ்சாயத்துக்குட்பட்ட பிளம்பிங் காண்ட்ராக்டர் இடம் விசாரித்த போது அவரும் நேரடியாக ஆய்வு செய்து இது தனக்குத் தெரியாமல் நடந்துள்ளது என்று கூறிவிட்டார்.
முன்னாள் கவுன்சிலர் கையூட்டு பெற்றுக் கொண்டு சில வேண்டிய நபர்களுக்கு இவ்வாறு
செய்து உள்ளார் மேற்படி விஷயங்களை மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து அதிகாரி இ ஓ அவர்கள் கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு பாகுபாடு இல்லாமல் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments