கோவை க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி!! தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி பங்கேற்பு

கோவை க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி போத்தனூர் பாத்திமா கனி மண்டப அரங்கில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நண்பர்கள் குழு நிர்வாகிகள் அசாருதீன்,இப்ராஹீம்,அக்கீம்,மைதீன் சேட் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி கலந்து கொண்டு இப்தார் நிகழ்வை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,வளரும் தலைமுறையினர் இது போன்ற மத நல்லிணக்க நிகழ்ச்சகளை நடத்துவது எதிர்காலத்தில் ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக ஏதுவாக இருக்கும் என பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் இப்தார் நோன்பு திறப்பதற்கான ஆரம்ப உணவாக பேரீச்சை,நோன்பு கஞ்சி,குளிர்பானங்கள்,மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள்,பெண்கள் சிறுவர் சிறுமிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அனைவருக்கும் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன்,சமூக ஆர்வலர் டோனி சிங்,மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர்,வழக்கறிஞர் இஸ்மாயில்,ஹஜ்ரத் அப்துல் ரகுமான்,தொழில் நுட்ப பிரிவு அபுதாகீர்,டிஸ்கோ காஜா,கோவை தல்ஹா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments