கார் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்கள்!!

கார் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்கள் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9 இ ஆகிய இரண்டு கார்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள மஹிந்திரா சி.ஏ.ஐ.ஷோரூமில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு தற்போது வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் முன்னனி கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான  மஹிந்திரா நிறுவனமும் அதன் புது, புது எலக்ட்ரிக் கார்களை வரிசையாக அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அந்த வரிசையில் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9 இ என இரண்டு எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் ஆகி உள்ளன.

இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள மஹிந்திரா சி.ஏ.ஐ.ஷோரூமில் நடைபெற்றது. சி.ஏ.ஐ.மஹேந்திரா பொது மேலாளர் சுரேஷ் மற்றும் கிளை மேலாளர் சுதீஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாலமுருகன் மற்றும் ரஜினி வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கார்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

மஹிந்திராவில் இருந்து ஏற்கனவே எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆனது முற்றிலும் வேறுப்பட்ட எலக்ட்ரிக் கார்களாக தற்போது சந்தையில் அறிமுகம் ஆகி இருப்பதாகவும்,  இந்த புதிய கார்கள் அழகிய முன்புற  தோற்றத்தில் வித்தியாசமானவைகளாகவும், ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் சதீஷ் குமார், விற்பனை மேலாளர் ஹரி ஹரன் உட்பட வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments