ELGi நிறுவனம் ஏர் கம்ப்ரஸர் செயல்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் ஸ்டேபிலைசார் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொழிற்சாலைகளில் மாறும் காற்றழுத்த தேவைக்கேற்ப கம்ப்ரசர் செயல்பாட்டை மேம்படுத்தும் விதமாக டேபிலைசார் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.இது நிலையற்ற செயல்திறன்,குறைந்த செயல்திறன் மற்றும் அடிக்கடி லோட் மற்றும் அன்லோடின் போது ஏற்படும் அதிக சிதைவு போன்ற பிரச்சினைகளை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் கம்ப்ரசர் திறன் மற்றும் தொழிற்சாலையின் காற்று தேவை மாற்றமடையும் சூழல் காரணமாக Cut-in மற்றும் Cut-out செயல்பாடுகள் அடிக்கடி நடப்பதை ஏற்படுத்த கம்ப்ரசரை பாதிக்கும் அளவுக்கு அதிர்வுகள் மற்றும் செயல்திறன் குறைவுகள் ஏற்படுகின்றன.
ஸ்டேபிலைசார் தொழில்நுட்பம் ரீசர்க்குலேட் மற்றும் ரெக்கவர் என்னும் முறையில் கம்ப்ரசர் திறன் மற்றும் தொழிற்சாலையின் காற்றை ஒருங்கிணைக்க கட்டுப்படுத்தப்பட்ட மறு சுழற்சி மற்றும் மீட்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.
ஸ்டேபிலைசார் தொழில்நுட்பம் தொழில்துறை உற்பத்தி முறைகளை பசுமை செலவுக்கு உகந்ததாக மாற்றும் என்று Elgi நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயராம் வரதராஜ் கூறினார்.ஸ்டேபிலைசார் தொழில்நுட்பத்தின் புதுமையான வடிவமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் உலகளவில் பதியப்பட்டுள்ளது இது காற்றழுத்த தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணும் ஒரு முக்கியமாக இருக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments