கோவை கரும்புகடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் புதிய சங்க அலுவலக திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!

கோவை பாலக்காடு சாலையில் உள்ள கரும்புகடை பகுதியில் துணிக்கடைகள்,ஜுவல்லரி,உணவகங்கள்,பேன்சி கடைகள் ,சூப்பர் ஸ்டோர்ஸ்,என வீட்டு உபயோகம் தொடர்பான அனைத்து பொருட்களை வியாபாரம் செய்யும் நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது போன்று வியாபாரம் செய்து வரும் அனைவரையும்  ஒன்றிணைக்கும் வகையில் கரும்புகடை வியாபாரிகள் நலச்சங்கம் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பாரத் நகர் 2 வது வீதியில் சங்கத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதிய அலுவலகம் துவங்கப்பட்டது.

இதற்கான துவக்க விழாவில் கரும்புகடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் சிராஜ்தீன்,செயலாளர் சையத் முஸ்தாக்,ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் கவுரவ ஆலோசகர் முகம்மது யூசுப், துணை தலைவர் நசீர்,துணை செயலாளர் ஹக்கீம்,இணை தலைவர் சம்சுதீன்,இணை செயலாளர் அப்துல் மாலிக்,பொருளாளர் சம்சுதீன்,மேலாளர் பைசல் ரஹ்மான்,தணிக்கையாளர் அபுதாகீர்,இணை மேலாளர் முகம்மது ராஃபி ,மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அபுதாகீர்,முகம்மது இக்பால்,ரோஷன் அஷ்ரப்,அப்துல் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய அலுவலகம் துவங்கப்பட்டதை தொடர்ந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து  நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,வெளி மாவட்டங்களில் இருந்து தினமும்  ஏராளமான பொதுமக்கள் கரும்புகடை பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிக்கு வங்கி ஒன்றை அமைக்க முன்வரவேண்டும் எனவும் மேலும் பொது கழிப்பிடம்,மருத்துவமனை,அரசு உயர்நிலை பள்ளி போன்ற கட்டமைப்பு வசதிகளை இந்த பகுதியில் ஏற்படுத்தி தர வேண்டும் என கரும்புகடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments