தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு - நான்கு பேருக்கு போலீஸ் வலைவீச்சு!!

ஓட்டப்பிடாரம் அருகே ராஜாவின் கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஞானதுரை மகன் பிரவீன் செல்வகுமார் (25)என்பவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்  அதே கிராமத்தைச் சேர்ந்த இம்மானுவேல் விஜயசீலன் (26), என்பவருக்கும், பிரவின் செல்வகுமாருக்கும்  இடையே கடந்த மாதம் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு நிகழ்ச்சியின் போது தகராறு ஏற்பட்டு பொங்கல் விழா கமிட்டியினர் சத்தம் போட்டு அனுப்பி உள்ளனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதை மனதில் வைத்துக் கொண்டு இன்று இமானுவேல் விஜயசீலன், புதியம்புத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்த ஆர்த்தி (26) உட்பட நான்கு பேர் சேர்ந்து,   T.குமாரகிரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பிரவீன் செல்வகுமாரை வழிமறித்து  நான்கு நபர்களும் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் பிரவீன் செல்வக்குமாருக்கு இடது கை  மணிக்கட்டு பகுதியில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்படி வழக்கில் தொடர்புடைய நான்கு நபர்களையும்  வலைவீசி தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-செல்வராஜ்.

Comments