அகில இந்திய அளவிலான ஆசியா ஜுவல் ஷோ நகை கண்காட்சி கோவையில் துவக்கம்!!

கோவை: இந்தியாவின் முன்னனி ஜுவல்லர்ஸ் கலந்து கொண்டுள்ள இதில் வைரம்,பிளாட்டினம்,தங்கம் என அனைத்து விதமான  சொகுசான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோவையில்  அகில இந்திய அளவிலான ஆசியா  நகைகள் கண்காட்சி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவாண்டா ஓட்டல் அரங்கில் துவங்கியது.

பிப்ரவரி 7 ந்தேதி துவங்கி  மூன்று நாட்கள் நடைபெற உள்ள  இதில் மும்பை, பெங்களுரு, டெல்லி, சென்னை உள்ளிட்ட இந்தியாவின்  முக்கிய  நகரங்களில் இருந்து,  முன்னணி நிறுவனங்களின் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நகை பிரியர்களுக்கான ஏராளமான டிசைன்களுடன்  நடைபெறும் இந்த நகை கண்காட்சியில் திருமணம் மற்றும் விழாக்கால விற்பனை நகை காண்காட்சியாக இந்தியாவின் மிகச்சிறந்த வடிவமைப்புகள், பிராண்டுகள் ஒரே கூரையின் கீழ் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய அளவில் முன்னணி, கைவினை கலைஞர்கள் உருவாக்கிய நகைகள் அனைத்தும் உயர்தர நுண்கலை, பிராண்ட் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு முக்கியத்துவம் பெற்றது.

தற்போது இருக்கக்கூடிய நுண்கலை தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், அரிதான கல் நகைகள், குந்தன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளன.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில், வர்த்தக சபை மற்றும் தொழில்துறை தலைவர் ராஜேஷ் பி லுண்ட் , சங்கீதா பீட்டர்-ஜூவல்லரி கியூரேட்டர், பி & எஸ் குழும நிறுவனங்களின் நிறுவனர்  பிரியங்கா சுந்தர், ஹெல்த் பேசிக்ஸ் & கோவின் தலைமை நிர்வாக அதிகாரி  ஸ்வாதி ரோஹித், ஜிட்டோ பெண்கள் பிரிவுத் தலைவர் ரீனா கோத்தாரி, திருமதி வேர்ல்ட் 2024 ரிங்கி ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் சச்தேவா கூறுகையில்,  சர்வதேச தரம் வாய்ந்த நகைகள் இந்த ஆசியா ஜுவல் ஷோ வில் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments