தனது கூட்டம் தான் முதலாக செல்வோம் என காட்டை வலம் வரும் யானைக் கூட்டங்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் பகுதியில் உள்ள கல்யாண பந்தல், முருகாலி, ஷேக்கல் முடி, புதுக்காடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் உலாவரும் காட்சிகள் மக்களை அச்சுறுத்துகிறது. 

அப்பகுதியில் அரசு பஸ்ஸை வழி விடாமல் இரண்டு குட்டிகளுடன் செல்லும் யானை கூட்டங்கள் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் மக்கள் பீதியில் தான் இருக்கிறார்கள். இரவு பகல் என்று பாக்காமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனவிலங்கு அதிகாரிகள் கூறி வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments