கோவை ஃபெய்த் மாடல் பள்ளியில் பசுமை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!! நூற்றுக்கும் மேற்பட்ட மழலை குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்பு!!!
கோவை செட்டிபாளையம் சாலை ரேடியோ நிலையம் அருகில் உள்ள ஃபெய்த் மாடல் பள்ளி சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிட்ஸ் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை இளம் தலைமுறை மாணவ, மாணவிகளிடையே வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இதில், 3 வயது குழந்தைகள் முதல் 17 வயது மாணவ, மாணவிகள் வரை 4 பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னதாக இந்நிகழ்ச்சியின் துவக்க விழா ஃபெய்த் மாடல் பள்ளியின் தலைவர் மருத்துவர் பசுலுல்லா தலைமையில் நடைபெற்ற இதில் செயலர் ஃபைசல் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக க்ரீன் கேர் அமைப்பின் தலைவர் செய்யது,லயன்ஸ் கிளப் சார்ட்டர் பிரசிடென்ட் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments