செட்டிபாளையம் சங்கமம் நகரில் பள்ளிவாசல் ஆண்டு விழா பேரூராட்சி தலைவர் ரங்கசாமி பங்கேற்பு..!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி அவர்கள் பங்கேற்றார் மற்றும் சங்கமம் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் முருகானந்தம். செயலாளர் அப்துல் ரஹீம். கலந்து கொண்டு உரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களுக்கு நிர்வாகத்தால் பொன்னாடை போற்றி வரவேற்று திருக்குர்ஆன் தமிழாக்க பதிப்பு வழங்கப்பட்டது.
மேலும் மதரசாவில் பயிலும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் சிறப்புரையாற்றிய Hi-Lux அன்சர் அவர்கள் இஸ்லாம் மார்க்கம் இஸ்லாமியர்களுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்பதையும் மனிதர்கள் அனைவருக்கும் படைக்கப்பட்ட ஒரு புனித மார்க்கம் என்பதை விளக்கி கூறி பூமியில் சமுதாய நல்லிணக்கத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கே இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துகிறது என்பதனை சிறப்பாக எடுத்துரைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மதரசத்தில் ஹீரா நிர்வாகத்தின் தலைவர் ஷாஜகான், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், செயலாளர் அன்சர், இணைச் செயலாளர் கோவை கார்டன் நிஜாம், பொருளாளர் முனவர் பாஷா, துணை பொருளாளர் மெஹர் அலி, கௌரவ ஆலோசகர் சதக்கத்துல்லா உமரி, மேலாளர் சமியுல்லா, நாசர், ரியாஸ் ஆட்டோ நாசர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருவாரியாக கலந்து விழாவை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.
Comments