மரத்தின் வாகு முறிந்து விழுந்து லேசான காயத்துடன் தப்பிய இரு சக்கர வாகன ஓட்டுனர்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள வரட்டுப்பாறை பகுதியில், வால்பாறையில் இருந்து உருளைக்கல்ஸ் செல்லும் வழியில் சரவணன் வயது 45 அவரது மனைவி சாந்தி வயது 40 ஆகிய இருவரும் Th48X9825 என்ற இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது வரட்டுப் பாறை பிரிவில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் வாகு முறிந்து விழுந்து இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சாந்தியின் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 வாகனத்தை வரவழைத்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சாந்தி என்பவருக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்குள் ஆகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வழியே செல்லும் நான்கு சக்கர இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்துக் குள்ளாகுவதால் சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் வாகைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சாலை அமைப்பு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments