டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியில் வடிவமைப்பு குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது!!

கோவை: முதலாவது சர்வதேச வடிவமைப்பு வாரத்தை முன்னிட்டு கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் செயல்படும் டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியில் தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கும் , வடிவமைப்பு துறை சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கும், வடிவமைப்பு துறை மீது ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்களுக்கும்  வடிவமைப்பு தொடர்பான சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.இதில் கோவை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போலந்து நாட்டைச் சேர்ந்த வடிவமைப்பு நிபுணர் ஒலா காட், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிபுணர் சம்யெல் ராக்ஸ், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டிசைன் துறை பேராசிரியர் மேக்னஸ் ஃபெயில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிபுணர் மார்க் பாண்ட் பங்கேற்பாளர்கள் முன் உரையாற்றினர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரி மாணவர்கள்  உருவாக்கிய வடிவமைப்பு மாதிரிகள் இடம்பெற்ற கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. இதை எல். எம். டபிள்யு. நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு, டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியின் டீன் ரத்தன் கங்காதர் துவக்கி வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments