கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது!!

கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட்  நிறுவனம், தங்களது நிறுவனத்தில், 10 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் 96 பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பெருமை படுத்தும் விழா கோவையில் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட்  நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பங்கள் வரை இந்த நிறுவனம் பல்வேறு புதிய, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த  நிறுவனம் துவங்கி 22 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது கோவையில்  இரண்டு கிளைகளும், அமேரிக்காவில் 2 கிளைகளும் என மொத்தமாக 4 கிளைகளுடன் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் நீண்ட வருடங்களாக  பணியாற்றும்  பணியாளர்களின் சேவையை போற்றும் வகையில், கோவை மதுக்கரை பகுதியில் உள்ள, லிண்டாஸ் கார்டன் திருமண மண்டபத்தில், பணியாளர்களை கெளரவபடுத்தும் விழா நடைபெற்றது. 

இதில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பலரும், தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதில் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுக்ளுக்கும் மேல் பணியாற்றும் பணியாளர்களின் பணியை போற்றும் விதமாக பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியினை இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அருண்குமார், எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டர் சங்கர் செல்வராஜ், ஆபரேசன் டைரக்டர் பரத்குமார், வைஸ் பிரசிடெண்ட் பிரகாஷ் மற்றும் ஜெனரல் மேனேஜர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து, கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும், 96 பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி விருதுகளும், நினைவு பரிசுகளும் வழங்கபட்டது. கூடுதல் சிறப்பம்சமாக இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களை மகழ்ச்சி படுத்தும் வகையில், சின்னத்திரை நட்சத்திரங்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments