சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகள் அமைப்பு மற்றும் கோதனா இலவச ஆலோசனை மையம் இணைந்து நடத்திய ஐம்பெரும் விழா நிகழ்ச்சி!!!கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் பங்கேற்பு...
கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியி்ல் உள்ள கோவை மாவட்ட காவலர் சமுதாக்கூடத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு மற்றும் கோதனா இலவச ஆலோசனை மையம் இணைந்து, மாணவ மாணவியர்களுக்க்கான யோகாசன போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, பசுமையை காக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா, நடைபெற்று நிறைவு பெற்ற, பொது தேர்வில், 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்புகளில் முடித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, தியாகிகளின் புத்தகங்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி என ஐம்பெரும் விழாவாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்று மலரை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். தொடர்த்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நல சங்க தலைவர் கோதனவள்ளி, மற்றும் துணை தலைவர் ஜெய்பிரகாஷ் விழா குறித்து விளக்க உரையாற்றி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், பாரதியார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் சித்ரா, சிந்தனை கவிஞர் கவிதாசன், டாக்டர் தவமணி பழனிசாமி, வழக்கறிஞர் சுந்தர வடிவேல், மனநல மருத்துவர் மோனி, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவன தலைவர் ஆர் கே குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments