ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது!!
கோவை - 31-01-25
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள - ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகின்ற மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கான விளம்பர பலகை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், "சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புலகம் பன்முக ஆய்வு" என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
இது குறித்த விளம்பர பலகை வெளியீட்டு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய சிந்தனை கவிஞர் கவிதாசன் கூறியதாவது;
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் மிக்கவராக தன்னை தேர்வு செய்துள்ளதற்க்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் நான் இதுவரை 60*க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள் 25"க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், தன்னம்பிக்கை மேடைப் பேச்சுகள்,கவியரங்கப் பதிவுகள், இலக்கியம், இலக்கிய அமைப்புகள் மூலம் புதிய படைப்பாளர்களை உருவாக்கியுள்ள தாகவும் எனவே தனது படைப்புகளை கருவாகக் கொண்டு இ ப்பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில், தனது கவிதைகள், கட்டுரைகள், கவியரங்க கவிதைகள், மேடைப் பேச்சுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி உரைகள் ஆகிய களங்களில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றது.
பேராசிரியர்கள், பல்துறை ஆய்வாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இக்கருத்தரங்கிற்காக தங்களது கட்டுரைகளை வழங்கலாம் என கூறினார்.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் கருத்தரங்க நாளில் தன்னுடன் இணைந்து அதனை புத்தகமாக வெளிடலாம் என்றார். கட்டுரையாளர்ககள் எவ்வித பதிவுக்கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று கூறியவர்
கருத்தரங்க நாளன்று மதிப்பீட்டாளர்களால் தேர்வு செய்யபடும் சிறந்த 10 கட்டுரைகளுக்கு தலா ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கபடும் என்றார்.
பல்துறை சாதனையாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் பல விருதுகளும், சான்றிதழ்களும் வழங்க உள்ளதாகவும், கூறினார்.
சமூக மேம்பாடு, மனித உறவு மேம்பாடு, குடும்ப உறவு மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தலைமை மற்றும் ஆளுமைப் பண்பு, திறன் மேம்பாடு, சமூகச் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள், சமூக முன்னேற்றச் சிந்தனைகள், மேலாண்மைக் கோட்பாடுகள், ஆன்மீகச் சிந்தனைகள், பேச்சுக் கலை, கட்டுரைக் கலை, படைப்பாக்கக் கலை போன்ற பல்துறை நோக்கில் கட்டுரைகள் இருக்கலாம் எனவும், தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் முனைவர் சித்ரா,
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஸ்வநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments