வாகன பதிவு சான்றிதழை வாகன சட்டபிரிவு 430 ன் படி நேரில் வழங்கும் முறையையும் பின்பற்ற வலியுறுத்தல்!!


தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பினர் கோவையில் கோரிக்கை

வாகன   பதிவு தொடர்பான ஆவணங்களை நேரில் வழங்குவது தொடர்பான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.. 

தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பில் இணைந்த  கோயம்புத்தூர் மாவட்ட ஆட்டோ கன்ஸல்டன்ட் மற்றும் டீலர்ஸ் வெல்ஃபேர் அசோயேஷன் பொதுக்குழு கூட்டம் கோவை  சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவிற்கு மாநிலத்தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான பி.எஸ்.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில முதுநிலை மூத்த தலைவர் துரை,மாவட்ட மூத்த தலைவர் கோவை ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் பல்வேறு  செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின் தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,வட்டார போக்குவரத்து  அலுவலகத்தில் இருந்து ஆர். சி. புக் தபாலில் அனுப்புவதால் பெரும் சிக்கல்களை வாகன வியாபாரிகள் சந்தித்து வருவதாகவும்,எனவே வாகன பதிவு சான்றிதழ்களை வாகன பிரிவு சட்டம் 430 ன் படி   நேரில் வழங்கும் முறையையும்  பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஏற்கனவே மனு வழங்கியுள்ளதாக கூறிய அவர்,தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆர்.சி.புத்தகம் தபாலில் பெறுவதால் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்புகள் எற்படுவதாக கூறிய அவர், இந்த கோரிக்கை  தொடர்பாக சென்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வாகன விற்பனையாளர்கள் சங்கத்தினர் பெரும் திரளாக கலந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதே போல போக்குவரத்து அலுவலகங்களில் எல்லா பணிகளிலும் கால தாமதம் ஏற்படுவதாக குற்றம் சாட்டிய அவர்,அலுவலங்களில் போதிய  ஊழியர்கள் இல்லாததே காரணம் என்றார்..

கூட்டத்தில் மாநில  பொருளாளர் சின்னச்சாமி, மாநில முதன்மை துணைத்தலைவர்கள் பால. மயில்வாகனன், காஜா முகமது, மாநில கூடுதல் செயலாளர் தனபாலன்,மாநில செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன்,தம்பு ராதாகிருஷ்ணன், முருகேஷ் குமார் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments