கோவை மக்களுக்கு ஜாக்பாட்!! வீடுகள் விற்பனை தொடர்ந்து 36 சதவீதம் அதிகரிப்பு!!!
கோவை மக்களுக்கு ஜாக்பாட். கோவை மாவட்டத்தில் வீடுகள் விற்பனை தொடர்ந்து 36 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் கோவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்தியாவின் டாப் 15 இரண்டாம் கட்ட நகரங்களில் வீடுகள் விற்பனை மதிப்பு கடந்த ஆண்டு 20% அதிகரித்துள்ளது என்றும் 1.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது எனவும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனங்களின் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் அகமதாபாத், சூரத், வதேரா, காந்திநகர், நாசிக், ஜெய்ப்பூர், நாக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், லக்னோ, கோவை, கோவா, கோபால், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 15 நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகபட்சமாக தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் வீடுகள் விற்பனை 36 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதைப்போல் விசாகப்பட்டினத்தில் 21% சரிந்துள்ளதாகவும் இது தொடர்பான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை மதிப்பை பொறுத்தவரை புவனேஸ்வரில் 47 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. அதைப்போல் நாசிக்கில் இரண்டு சதவீதம் சரிந்தும் காணப்படுகிறது. இந்த மதிப்பின் அடிப்படையில் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் நான்கு சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்டிடம் மூலப் பொருட்களின் விலை உயர்வு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து யூகங்களின் காரணமாக இந்த நகரங்களில் வீடுகள் விலை விரைவாக அதிகரித்து வருவதாக ஆலோசகர் சார்பில் கூறப்படுகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் நிலம் வைத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாநகரம் மிகுந்த வளர்ச்சி அடைந்த மாநகராக மாறி வருவது நாம் அனைவரும் அறிந்ததே கோவை மாநகரை சுற்றிலும் அதன் வளர்ச்சிக்கேற்ப வீட்டு மனைகளும் வீடுகளும் பெருகி வருகின்றன இம்மாதிரியான சூழ்நிலையில் பல்வகைப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பலவிதமான வாக்குறுதிகளை கொடுத்து வீட்டு மனைகளையும் வீடுகளையும் விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஒரு சில நிறுவனங்கள் மக்களின் நன்மதிப்பை பெற்று நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிற து. அதுபோன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வீட்டு மனைகளையும் வீடுகளையும் கட்டிக் கொடுத்து வருகின்றனர் அரசின் அனுமதியுடன் (D.T.C.P Approval and RARA Approval) வீட்டு மனைகளை வழங்கி வருகின்றனர். மேலும் தங்கள் நிறுவனங்களின் மூலம் அமைக்கப்படும் வீட்டுமனைகளுக்கு முறையான சாலை வசதியும் சாக்கடை வசதியும் மின்விளக்குகளும் 24 மணி நேர கண்காணிப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தி பாதுகாவலருடன் வாடிக்கையாளருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வீட்டு மனைகளை விற்பனை செய்து வருகின்றன. மேலும் அரசின் சட்ட திட்டங்களுக்கு(Legal) உட்பட்டு மனை பிரிவுகளை பிரித்து கொடுத்து வருகின்றனர் .
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குபவர்கள் அந்த வீடுகளில் முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு அதனை வாங்க வேண்டும் வீட்டின் கட்டுமானத்தின் போது அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் விபரங்களை தெளிவாக கேட்டு வாங்க வேண்டும்
ஏழை, நடுத்தர மக்களின் கனவே எப்படியாவது நமக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதை ஆகும் எனவே வீட்டு மனையோ அல்லது வீடுகளோ வாங்கும் பொழுது அந்த இடத்திற்கான அரசின் அனுமதிகள் அனைத்தும் பெற்றுள்ளார்களா வீட்டுமனை சட்ட முறைப்படி உள்ளதா மேலும் கட்டிடம் தரமான முறையில் கட்டப்பட்டுள்ளதா, என்பதை நன்கு அறிந்து வீட்டுமனை விற்பனை செய்யும் நிறுவனங்களின் கடந்த கால செயல்திட்டங்களையும் அவர்களின் நம்பகத் தன்மையும் நன்கு ஆராய்ந்து அதன் பிறகு வீட்டுமனைகளையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments