கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெற்ற க்ரீன் ஃபீல்டு பள்ளி ஆண்டு விழா!! க்ரீனரா 25 (Greenaura) எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி அசத்திய பள்ளி மாணவர்கள்
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள க்ரீன் ஃபீல்டு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே உரையாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள வி.சி.எஸ். மெட்ரிக் உயர் நிலை பள்ளி எனும் க்ரீன் ஃபீல்டு பள்ளி ஆண்டு விழா பள்ளியின் சேர் பெர்சன் சுகுணா தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளியின் தாளாளர் ஹெரால்டு சாம், செயலர் க்ளிஃபோர்டு ஹெரால்டு,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் ஜகதீஷ் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் கவுரவ அழைப்பாளர்களாக சி.ஆர்.பி.எஃப்.ஆய்வாளர் தமிழ்செல்வன்,மார்டின் குழுமங்களின் மேலாளர் ஜான் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ,மாணவிகளிடையே பேசிய சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்து வேல்,விண்வெளி சார்ந்த அறிவியல் தொழில் நுட்ப பொறியியல் துறை மிகப்பெரிய வளர்ச்சி மாற்றத்தை காண உள்ளதாகவும், எனவே கல்வி பயிலும் மாணவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் ஒருங்கிணைந்து சந்திராயன் விண்கலம் நிலவில் இறங்குவதை போல மேடையில் தத்ரூபமாக வடிவமைத்து அசத்தினர். இதே போல மழலை குழந்தைகள் மற்றும் மாணவ,மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக கடந்த கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ,மாணவிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் ஆசிரிய,ஆசிரியைகள்,ஊழியர்கள்,மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments