ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் (JNEC) போட்டிகளில், கோவை ஸ்டேபிள்ஸ் அகாடமி எட்டு பதக்கங்கள் வென்று சாதனை!!
கடந்த மாதம் ட ஜூனியர் தேசிய குதிரை ஏற்ற சாம்பியன்ஷிப் டில்லியில் உள்ள இராணுவ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ஜூனியர் பிரிவில் நடைபெற்ற இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் குதிரையேற்ற வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் கோவை ஸ்டேபிள்ஸ் குதிரையேற்ற பயிற்சி அகாடமியில் இருந்து, கலந்து கொண்ட அர்ஷத் 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் மற்றும் மற்றும் கபிலேஷ் ஹர்ஷித் ஆகிய இருவரும் முறையே இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், இந்த ஆண்டின் சிறப்புகளை முன்னிறுத்தும் வகையில், ஹர்ஷத் தனது குதிரையுடன் 185 செ.மீ உயரத்தில் பாய்ந்து, 2024-ல் இந்தியாவின் மிக உயர்ந்த குதிப்பு சாதனையை EPL கிராண்ட் ஃபைனலில் நிகழ்த்தினார். அதேநேரம், ஆராதனா ஆனந்த், உலக அளவில் சிறுவர்கள் சுற்று பிரிவில் முதலிடம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டிகளில் கோவையை சேர்ந்த ஸ்டேபிள்ஸ் அகாடமி தென்னிந்தியாவின் முன்னணி குதிரை ஏற்றப் பயிற்சி மையமாக உறுதி செய்துள்ளது குறிப்பிடதக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments