தேமுதிக கோவை மாநகர மாவட்ட செயலாளர் சந்துரு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேமுதிக கழக பொதுசெயலாளர் மக்கள் தலைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைப்படி கோவையில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக கோவை மாநகர மாவட்ட செயலாளர் சந்துரு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பெண்கள் பாதுகாப்பு, பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தேமுதிக மாநகர், மாவட்ட கழக செயலாளர் சிங்கை சந்துரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும், அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும், மழை, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும், கஞ்சா போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காந்திபுரம் பகுதி கழக பொருட்பாளர் செந்தில்குமார்,மாநில தொழிற்சங்க பேரவை துணை சட்ட ஆலோசகர் முருகராஜ்,அவைத்தலைவர் பொன்னுராஜ், பொருளாளர் ராகவலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜ்,ஜெயக்குமார், ஜனா சுலைமான்,தலைமை செயற்க்குழு உறுப்பினர் கருப்புதுறை, தேவராஜ், முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் அழகர்செந்தில்,பன்னீர்செல்வம், தண்டபாணி, சர்தார்,செந்தில்குமார், கேப்டன் குணா,மணிகண்டன், ஒன்றிய செயலாளர் சரவணகுமார்,தொழிற்சங்க மாவட்ட செயலாளர் நீ.நா வேலுசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியம், மற்றும் தர்மராஜ்,ஜீவானந்தம், தண்டபாணி, மகளிர் அணி சந்திரா,அழகர்ராணி உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்துகொணரடனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments