கோவை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணிக்க விழா மற்றும் விளையாட்டு விழா...

கோவை,சொக்கம்புதுார் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாற்பதாம் ஆண்டு மாணிக்க விழா மற்றும் விளையாட்டு விழா  வெகு விமரிசையாக நடைபெற்றது. எஸ்.பி. ஓ.ஏ. கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் நிதிஷ் ஆன்ட்ரெயா ராஜா சிங் தலைமையில் நடைபெற்ற விழாவில் செயலர் மற்றும் தாளாளர்  செந்தில் ரமேஷ் துவக்கவுரையாற்றினார். கோவை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகளின் தாளாளர்  முருகேசன் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் முதல்வர் சபுரால் பானு இப்ராஹீம் பள்ளியின் ஆண்டு அறிக்கையையும் சமர்ப்பித்தார். 

முன்னதாக நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக   சர்வதேச பாரா விளையாட்டு வீராங்கனை கிருத்திகா ஜெயச்சந்திரன் பங்கேற்றுத் தேசியக் கொடியை ஏற்றி, மாணவ மாணவியரின் அணிவகுப்பை ஏற்று விளையாட்டு விழாவினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். இதில் மாணவ,மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து  மாலையில் பள்ளியின் நாற்பதாம் ஆண்டு மாணிக்க விழா."சமஸ்கிருத்திக் தரோஹர்'' ஆசிய கலாச்சாரம் என்ற தலைப்பில் நடைபெற்றது. 


இதில் கோவை, வணிக நீதிமன்ற மூத்த சிவில் நீதியரசர் த.சி.பி.வேதகிரி முதன்மை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.  கோவை, தமிழ்நாடு வனத்துறை அகாடமி  துணை இயக்குநர்  ஹேமலதா கவுரவ  விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.  பள்ளியின் மாணிக்க விழாவை முன்னிட்டு "சமஸ்கிருத்திக் தரோஹர்'' எனும் ஆண்டு மலரை பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர்  செந்தில் ரமேஷ் வெளியிட்டார். விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரான விமான படை கமாண்டர்  கிருஷ்ணக்குமார் பங்கேற்று உரையாற்றினார். தொடர்ந்து விழாவில் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய பண்பாடுகளை எடுத்தும் கூறும் வகையில் நடைபெற்ற ஆடல்,பாடல்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் வெகுவாக கவர்ந்தன. விழாவில் எஸ். பி.ஓ. ஏ. கல்வி அறக்கட்டளையின் இணைச் செயலர் லாசர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  செல்வக்குமார்,பள்ளியின் துணை முதல்வர் ஜீவா செந்தில் உட்பட ஆசி்ரியர்கள்,பெற்றோர்கள்,அலுவலக ஊழியர்கள், மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments