ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்பாக கைவினை பொருட்கள் கண்காட்சி!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்பாக பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் 5 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் தொழில் முனைவோர் கண்காட்சி டாடாபாத் பகுதியில் உள்ள வியாசா மந்திர் அரங்கில் நடைபெற்றது.
ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் நிறுவனர் ராதா பெல்லன் மற்றும் செயலாளர் சுமிதா ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக சென்னை ரைஸ் உரிமையாளர் ராஜ சேகரன் ராஜ்குமார், சென்னை மொபைல் உரிமையாளர் சம்சு அலி, சங்கரா கல்லூரி நிறுவனர் நித்யா ராமச்சந்திரன், எம்.சி.ஆர் உரிமையாளர் ரிக்சன், கொடிசியா தலைவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், பெண் தொழில் முனைவார்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
ஜனவரி 4 மற்றும் 5 என இரு நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில் கல்வி,மருத்துவம் உள்ளிட்ட துறை சார்ந்த அரங்குகளும் மேலும் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் என அனைவருக்குமான ஆடை அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான அலங்கார பொருட்கள்,துணி வகைகள்,காலணிகள் என அனைத்து விதமான சுமார் 75 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
மேலும் இந்த கண்காட்சியில் பெண்களுக்கு தொழில் முனைவோர் திறனை வளர்த்தல், அவர்களின் தொழில் மேம்படுத்துதல் மற்றும் சுயதொழில் முன்னேற்றத்தை அடையவும், சுயதொழிலில் வளர்ச்சியடைய ஆலோசனைகளை பெறும் விதமாக இந்த கண்காட்சி இருக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments