கரிமில வாய்வை கட்டுப்படுத்துவதில், மரங்களை விட, காடுகளை விட நீர்த்தேக்கங்கள் பன் மடங்கு உதவும்!!

கௌசிகா நதியை உயிர்ப்பிக்க ரூ.160 கோடி திட்டச் செலவில் ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு முன்னெடுப்பில் கௌசிகா நீர் கரங்கள் அமைப்புடன் இணைந்து நில அளவீடு பணி கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கப்பட்டது.  

காட்டுப் பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து - தேவம்பாளையம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அளவீடு பணி முடிந்துள்ளது. மூன்று கட்டங்களாக நில அளவீடும் பணிகள் பிரிக்கப்பட்டு, அதில் முதல் பகுதி வையம்பாளையம் - தேவம்பாளையம் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கான விரிவான விவரங்களை ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு வெளியிடுகிறார். இந்த அறிக்கையின்படி நிதி திரட்டுதல் நடைபெறும். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கௌசிகா நதி மீட்டெடுப்பு குழு திட்டப் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பொ. யதீஷ் பேசும்போது :- ஒரு நதி என்பது மனித நாகரீகத்துடன் தொடர்புடையது. கௌசிகா நதியின் வரலாறு, கலாச்சாரம், நாகரீகம் சார்ந்த பல அம்சங்கள் இந்த நதி மீட் பாக்கம் திட்டம் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 

கரிமில வாய்வை கட்டுப்படுத்துவதில், மரங்களை விட, காடுகளை விட நீர்த்தேக்கங்கள் பன் மடங்கு உதவும். நதிகள், நீர்நிலைகள் இல்லாவிட்டால் பூமியைக் குளிர்விக்க முடியாது. பூமியின் வெப்பமானது 2024 ல் உலக நாடுகள் நிர்ணயித்த கட்டுப்பாட்டு அளவைத் தாண்டி 1.55 டிகிரியாக இப்போது கூடுதல் ஆகி உள்ளது. இந்த நிலையில்  பூமியில்  கௌசிகா நதி போல, நதி மீட்பு உருவாக்க திட்டங்கள் விரைவுப்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தில் நாங்கள் சிறப்பாக முன்னேறி வருகிறோம். 

என்று பேசினார்.ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுநர் ரோ அட்வகேட் சுந்தரவடிவேல் பேசும்போது  :- கவுசிகா நதி கரைபுரண்டு ஓடும் காலம் நெருங்கி வருகிறது. இந்த நதி நீர் வழித் தடத்தை மீட்டு உருவாக்குவதில் கவுசிகா நதிக் கரங்களுடன், ரோட்டரி அமைப்பு ம் இணைந்து 5000 நபர்களின் பங்கேற்பை உறுதி செய்வதிலும் முனைப்பாக உள்ளோம். என்று பேசினார்.ரோட்டேரியன் கவிதா கோபாலகிருஷ்ணன், இணை ஆளுநர் வரவேற்புரை வழங்கினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கௌசிகா நீர்க்கரங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கௌசிகா நதி மற்றும் கௌசிகா நீர்க்கரங்கள் செயல்பாடுகள் பற்றி கண்ணோட்டப் படுத்தினர். மாஸ்கொயர் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரோட்டேரியன் மகேந்திரன் மற்றும் வனிதா மகேந்திரன் ஆகியோர் நில அளவிடும் பணியை மேற்கொண்டனர். மேலும், விரிவான அறிக்கையை  ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு மற்றும் கௌசிகா நீர் கரங்கள் அமைப்பினரிடம் சமர்ப்பித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments