கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் 4-நாள் திருமண வைர நகைகள் மற்றும் விற்பனை கண்காட்சி!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பிரம்மாண்டமான திருமண வைர கண்காட்சி மற்றும் விற்பனையில் ஒவ்வொரு பெண்ணின் ஆபரணப் பெட்டியின் மதிப்பை உயர்த்தும் வகையில் உயர் மதிப்புமிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தனிஷ்க் தனது வைர நகைகளின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி* சலுகையையும் [up to 20% off*] வழங்குகிறது. இந்தக் கண்காட்சியானது ஜனவரி 9 முதல் ஜனவரி 12 வரை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வெல்கம் ஐடிசி ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் காதணிகள், வளையல்கள், நெக்லஸ்கள், பாரம்பரிய ஹராம்கள், ஒட்டியாணம், மோதிரங்கள் மற்றும் பலவற்றைக் கொண்ட 2,000 க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளின் கலெக்சன்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. ரூ.30,000 விலையில் தொடங்கி ரூ.1 கோடி வரையிலான நகைகள் இங்கு இடம் பெற்றுள்ளது. பல்வேறு வகையான விருப்பத்தேர்வுகள் மற்றும் பட்ஜெட்டுகளுக்கு ஏற்றவாறு வகைபடுத்தப்பட்டள்ளது. காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொரு நகையும் தனிஷ்கின் தனித்துவமான கலைத்திறனையும் தரத்திற்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
தனிஷ்க், வைரங்களை ஒவ்வொரு பெண்ணின் தனித்துவமான ஆளுமைமிக்க பயணத்தின் அழகிய பிரதிபலிப்பாகவும், அவர்களின் ஆத்மார்த்தமான புத்திசாலித்தனம் மற்றும் நேர்த்தியின் அடையாளமாகவும் உணர்கிறது. வாழ்க்கையின் நீண்ட அழகியப் பயணத்தில், காதல், அர்ப்பணிப்பு மற்றும் எதிர்காலத்திற்கான கனவுகளை ஒன்றிணைக்கும் குறிப்பிடத்தக்க மைல்கற்களாக திருமணங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நம்முடைய உணர்வுப்பூர்வமான தருணங்களில் மறக்கமுடியாத அதன் பங்கை கொண்டாடும் வகையில், தனிஷ்க் மாபெரும் வைர நகைத் தொகுப்பை வழங்குகிறது. ஒவ்வொரு ஆபரணமும் மனதை மயக்கும் பிரகாசம், ஜொலிஜொலிப்பு மற்றும் உத்வேகமளிக்கும் கவர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆபரணமும், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையின் பன்முக அழகை எதிரொலிக்க செய்கிறது.
கோயம்புத்தூரில் உள்ள நான்கு விற்பனை நிலையங்கள் உட்பட கொங்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து தனிஷ்க் கிளைகளிலும் பிரத்யேக சேகரிப்புகளை ஒன்றிணைக்கிறது. தனிஷ்கின் லைட்ஸ்கோப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இயற்கை வைரங்களை நேரடியாக அவற்றின் உயர்ந்த தரத்தை அனுபவிக்க ஒரு தனித்துவமான வழியை வழங்குகிறது. ஏந்த கண்காட்சியில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய வைர நகைகளையும் மாற்றிக் கொள்ளலாம்.
தனிஷ்க் - தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சர்கிள் வணிகத் தலைவர் நரசிம்மன் அவர்கள் தனிஷ்க் - தமிழ்நாடு, சர்கிள் வணிக மேலாளர் சந்திரசேகர் ஆகியோருடன், தனிஷ்க் - தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கிளஸ்டர் மேலாளர் சந்தோஷ் மற்றும் தனிஷ்க் - கோவையின் பகுதி வணிக மேலாளர்கள் வினீத் மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் முன்னிலையில் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments