புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய (VIVO X 200) விவோ X 200 கோவையில் அறிமுகம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த ஜனவரி மாதம் விவோ நிறுவனத்தின் பிரீமியம் வகை ஸ்மார்ட் போன்களான எக்ஸ் 100 அறிமுகமான நிலையில், அதன் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் விவோ தனது அடுத்த பதிப்பாக விவோ எக்ஸ் 200 ஐ சந்தையில் அறிமுகபடுத்தி உள்ளது.
இந்நிலையில் இதற்கான அறிமுக விழா செல்போன் விற்பனையில் முன்னனி நிறுவனமான சென்னை மொபைல்ஸ் சார்பாக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சம்சு அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,விவோ நிறுவனத்தின் தமிழ்நாடு பொது மேலாளர் டாம்,துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அசார் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு புதிய விவோ X 200 போனை அறிமுகம் செய்தனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விவோ X 200 போன் குறித்து சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சம்சு அலி மற்றும் விவோ நிறுவன தமிழ்நாடு துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில்;புதிய விவோ X 200 மொபைல் போனில், பிரதான கேமரா 50 மெகாபிக்சல் மற்றும் செல்பி கேமரா 32 மெகாபிக்சலை கொண்டுள்ளது. கூடுதலாக 200MP ஜீயஸ் (ZEISS) APO டெலிபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது.
இதில் மீடியாடெக் டிமென்சிட்டி சிப்செட் மூலம் இயக்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 15 மூலம் இயங்குகிறது. இந்த போனின் ஆரம்ப விலை 65 ஆயிரம் ரூபாய் முதல் துவங்குவதாகவும்,சிங்கிள் வேரியண்ட் மாடலாக வெளிவந்துள்ள எக்ஸ் 200 புரோ மாடலின் விலை 95 ஆயிரம் ரூபாயாக நிர்ணயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அறிமுக நிகழ்ச்சியில் சென்னை மொபைல்ஸ் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments