பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஆராய ஊக்குவிக்கும் விதமாக கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி!!
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஆராய ஊக்குவிக்கும் விதமாக கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான எதிர்கால தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவியல் கண்காட்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டி.ஆர்.கே.சரசுவதி, நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலர் முனைவர் கே.பிரியா மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஏ.பொன்னுசாமி கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக்கற்றல் அறிவியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எஸ்.சசிகலா வரவேற்பு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் உறுப்பினர், நீதிபதி ஏ.எஸ்.ரத்தினசாமி,கூடுதல் மாவட்ட அரசு வழக்கறிஞர் .கே.என்.வெற்றிவேல், கோவை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு)சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஆராய மாணவர்களை ஊக்குவிப்பதும், அறிவியல் சிந்தனையை வளர்ப்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாக கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.இதில் கோவையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் அறிவியல் திட்டங்கள், சோதனைகள் மற்றும் மாதிரிகளைக் காட்சிப்படுத்தினர் .
IoT சென்சார்களைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான விளக்கக்காட்சிகள் மூலம் அறிவியல் கருத்துகளை மாணவர்கள் புரிந்துகொண்டனர். இந்த கண்காட்சியை சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டனர். இத்தகைய அனுபவங்கள் அவர்களின் கற்றலை வலுப்படுத்துவதோடு, கல்வியாளர்களுடன் அறிவியல் கருத்துகளைத் தொடர்பு படுத்தக்கூடியதாகவும் இந்நிகழ்வு அமைந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வின் இறுதியில் உதவிப் பேராசிரியை டாக்டர். எஸ். சரண்யா நன்றியுரை வழங்கினார்.
-சீனி, போத்தனூர்.
Comments