தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறப்பு விழா ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது...
கோவையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும், தி ஐ பவுண்டேஷன், கோவை கண் மருத்துவனையின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இந்த புது கட்டிடத்தின் சிறப்புகள் பற்றி டாக்டர் ஷ்ரேயஸ் ராமமூர்த்தி விளக்கினார்.
தொடர்ந்து இந்த நிகழ்வின் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன்; கங்கா மருத்துவமனையின் ஆர்தோபீடிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் S. ராஜசேகரன், கிராஃப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் ஶ்ரீனிவாசன் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய கட்டிடம் திறப்பு விழா குறித்து பேசிய தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின், தலைவர், டாக்டர். ராமமூர்த்தி, 1.20 லட்சம் சதுர அடியில் விரிவாக்கப்பட்ட வளாகம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் சேவைகளை மேம்படுத்தவும், உயர் தர சிகிச்சையை வழங்கவும் எங்களுக்கு உதவுகிறது என்றும் இக்கட்டிட உள்கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியும் நோயாளியின் நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
130 க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள், 250க்கும் மேற்பட்ட அனுபவமிக்க ஆப்டோமெட்ரிஸ்ட், மற்றும் 1500 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதே, தி ஐ ஃபவுண்டேஷனின் உண்மையான வலிமையாகும் என தெரிவித்தார்.
-சீனி போத்தனூர்.
Comments