தூத்துக்குடியில் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் நிறுவனம் சார்பில் கேக் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் நிறுவனம் தமிழகத்திலேயே முதன் முறையாக கேத்திருவிழாவை தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் கலைஞர் அரங்கத்தில் வைத்து நடத்துகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏராளமான கேக் வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் நிறுவன நிர்வாக இயக்குனர் ரதிதேவி சண்முகம் வரவேற்றார். 

ப்ளாக் ஃபாரஸ்ட் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சண்முகம் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் திருவிழா கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

டிசம்பர் 23ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மெகா கேக் திருவிழாவில் 33 வருடம் கேக் தயாரிப்பில் அனுபவமிக்க ஷெப் ஆக திகழும் சண்முகவடிவேல் மற்றும் குழுவினர் கை வண்ணத்தில் வித, விதமான கேக் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த கேக் வகைகளை வாங்கிச் சென்று வருகின்றனர்.

விழாவில், மேயர் ஜெகன் பெரியசாமி, டைட்டானிக் ஷிப் கேக், கிறிஸ்துமஸ் கேக், வானவில் கேக், பார்பிகேர்ள் கேக், நெய் கேக், டோனட் கேக், சாக்கோ மச், சாக்கோ பிரபுள், ரிச் பிளம், புரூட் பிளம், டார்க் சாக்கோ மஞ்ச், கேஷில் பிரவுனி, கேரட் கேக், எக்லஸ் மின்ஸ், ராயல் ரிச் பிளம், வென்னிலா, ஸ்டாபெரி, பைன் ஆப்பிள், பட்டர் ஸ்கிராச், பிளாக் கரன்ட், பேபி பாஸ் கேக் உட்பட ஏராளமான கேக் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ந.பூங்கோதை, தூத்துக்குடி.

Comments