கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி ஸ்டாலின் ஒப்புதல்!

கோவை - 18-12-24: கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதல்..!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நான் படித்த பள்ளி கல்லூரி அனைத்துமே கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றும் நான் ஒரு கிறிஸ்தவன் என கூறுவதில் பெருமைப்படுகிறேன் என்ற உதயநிதி ஸ்டாலின், இது பல சங்கிகளை கோபப்படுத்தும் என்றார்.

கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் விழா மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்;

உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா எனக் கூறி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். தான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படிப்பு லயோலா கல்லூரி என்ற உதயநிதி, நானும் ஒரு கிறிஸ்துவன் என பெருமைப்படுகிறேன் எனக் கூறினார்.

இது பல சங்கிகளை கோபப்படுத்தும் எனக்குரிய உதயநிதி ஸ்டாலின்,அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன நீங்கள் இந்து என்று என்னைத் தான் நான் ஹிந்து கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன் இஸ்லாமியன் என்று நினைத்தால் இஸ்லாமியம் நான் அனைத்து மதத்திற்கும் சொந்தக்காரன் என்றார். 

அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருவதாக தெரிவித்தார். 

சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி உள்ளதை சுட்டிக்காட்டிய உதயநிதி, இப்படி ஒரு நீதிபதி இருந்தால், நீதிமன்றத்தில் நியாயம் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். மதரீதியான அவதூறு பேச்சு பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதிமுக அதனை ஆதரிக்கவில்லை என்றார். இதன் மூலம் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியாகிறது என்றார்.

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒரு தீர்மானம் கூட மத்திய பாஜக அரசை கண்டித்து இயற்றப்படவில்லை என்பதே இதற்கு சாட்சி என்றார். திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் எனக் கூறிய அவர் கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், திமுக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments