கோவையில் நடைபெற்ற சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டி...
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ப் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு. கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ஃப் விளையாட்டு வீர்ர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை, மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் வகையில் கோயமுத்தூர் கோல்ப் கிளப்புடன் இணைந்து சாரிட்டி கோப்பைக்கான கோல்ஃப் போட்டிகள் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து இரண்டாவது சீசனாக செட்டிபாளையம் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப் புல்வெளியில் நடைபெற்ற இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 96 கோல்ப் வீரர்கள் 4 அணிகளாக கலந்து கொண்டனர். இது குறித்த செய்தாளர்களிடம் செஷாயர் அறக்கட்டளை துணை தலைவர் வி.ஆர்.நரேன்,கோயமுத்தூர் கோல்ஃப் கிளப் தலைவர் கோபிநாத்,செயலாளர் துரைராஜ்,கேப்டன் அஷ்வின் சந்திரன்,
செஷாயர் அறக்கட்டளை பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செய்து வரும் சேவைகள் குறித்து, அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போட்டி இரண்டாவது ஆண்டாக கோவையில் நடைபெறுவதாகவும், இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சேரிட்டி கோப்பை கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
-சீனி, போத்தனூர்.
Comments