ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது!!

கோவை: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான இடையில் கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த 42,000 வாடிக்கையாளர்களுக்கு 238 கோடி ரூபாய்க்கு மேல் தீர்வு (Claim) வழங்கியுள்ளதாக, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.அமிதாப் ஜெயின் கோவையில் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காப்பீடு திட்ட நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் பயனாளிகள் பெறும் பலன்கள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நகர்புற மற்றும் ஊரக பகுதி வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக, ஸ்டார் ஆரோக்யா டிஜி சேவா திட்டம் இப்போது தமிழ்நாடு முழுவதும் 74 கிராமங்களுக்கு சேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

சமூகத்தில்  ஆரோக்கியமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம் என தெரிவித்த அவர்,அந்த அடிப்படையில் அனைவருக்குமான திட்டமாக சூப்பர் ஸ்டார் ஹெல்த் பாலிசியை  சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளதை குறிப்பிட்டார்.

இந்த பாலிசியின்  வாயிலாக , முன்பே இருக்கும் நிலைமைகளுக்கு Quick Shield கவரேஜ், நிதிப் பாதுகாப்பின் மீதான உன்மையான வரம்பற்ற காப்பீட்டுத் தொகை மற்றும் கடுமையான நோய் அல்லது விபத்து மரணம் ஏற்பட்டால் பிரீமியம் தள்ளுபடி பலன்கள் உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களை வழங்குவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு  ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான  இடையில் கோவை  மற்றும் சேலத்தைச் சேர்ந்த 42,000 வாடிக்கையாளர்களுக்கு 238 கோடி ரூபாய்க்கு    மேல் தீர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது,ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு நிறுவனத்தின் தமிழ்நாடு எக்ஸிகியூடிவ் பிரசிடெண்ட் மற்றும் ரீஜனல் ஹெட் பாலாஜி பாபு மற்றும் கோவை  மண்டல மேலாளர்கள் பலர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments