கோவை மாநகராட்சி 86 வது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கு வார்டு மாமன்ற உறுப்பினர் அஹமது கபீர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாநகராட்சி 86வது வார்டு மாமன்ற உறுப்பினராக அஹமது கபீர் தனது வார்டு பகுதி விளையாட்டு மைதானம்,பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளி, அறிவுசார் மையம்,கபர்ஸ்தான், உடற்பயிற்சிக்கூடம் வேண்டும் என மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் மாமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் புல்லுக்காடு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் கிடைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதே போல மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கான நிலம் புல்லுக்காட்டில் மூன்று ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதே போல மாமன்ற கூட்டத்தில் 86வது வார்டு மற்றும் 84 வது வார்டு ஜமாத்தார்களின்  ஒத்துழைப்புடன் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கபர்ஸ்தானிற்க்கு இடம் ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மேலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம்  கொண்டு வருவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 86வது வார்டு மாமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றித் தந்த மாநகராட்சி மேயருக்கும், மாநகராட்சி ஆணையாளருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தமிழக அமைச்சர்கள் மற்றும் முதல்வருக்கு மாமன்ற உறுப்பினர் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்தார்.

செய்தியாளர்களின் சந்திப்பின் போது தமுமுக மாவட்டத் தலைவர் சர்புதீன்,மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான்,மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்டத் துணைத் தலைவர் அப்பாஸ்,தமுமுக மாவட்டத் துணைச் செயலாளர்கள் பைசல் ரகுமான்,அசாருதீன்,மமக மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஷாஜகான்,ஆஷிக் அகமது, 84 வது வார்டு பொறுப்பாளர் ஆசிக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments