ஆற்றங்கரை கிராமத்தில் கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 5 ஆடுகள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை சாலமோன்நகர் பகுதியில் முதியவர்கள் சுவாமிதாசன்- பாக்கியராஜம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். சுவாமிதாசன் மனைவி பாக்கியராஜம்மாள் ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கனமழையின் காரணமாக திடீரென வீடு இடிந்து விழுந்தது, இதில் சுவாமிதாசன் லேசான காயமடைந்தார்.
வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆடுகள் மீது ஓடுகள் மற்றும் மண் கட்டிகள் விழுந்ததில் பாரம் தாங்காமல் 5 ஆடுகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் கால்நடை துறையினர் உயிரிழந்த ஆடுகளை ஆய்வு செய்து, வீட்டில் உள்ளோர் பாதுகாப்பான இடத்திற்கு செல்லமாறு அறிவுறுத்தினர். உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுவாமிதாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments