குடும்பத்தினர் அனைவருக்குமான பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் ஷாப்பிங் திருவிழா 2024!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதத்தி்ல் கொடிசியா சார்பாக கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா நடைபெறும். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் விழாவாக நடக்கும் இந்த கண்காட்சியின் பத்தாவது பதிப்பாக இந்த வருடம் டிசம்பர் 21 ந்தேதி துவங்கி ஜனவரி 1 ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஒசூர் சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் நந்தகோபால் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர்.
சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.
கண்காட்சியில் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்தக் கண்காட்சி வீட்டு உபயோக சாதனங்கள் சூரிய ஒளி சாதனங்கள் தங்கம் மற்றும் வைர நகைகள், பரிசு பொருட்கள் பர்னிச்சர்ஸ் ஜவுளி வகைகள்,காலணிகள்,பாரம்பரிய ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் உடற்பயிற்சி சாதனங்கள் ஆட்டோமொபைல் உதிர் பாகங்கள் சமையலறை பொருட்கள் மற்றும் சுற்றுலா செல்வதற்கான தகவல் அரங்குகள், நிதி நிறுவனங்கள் என நுகர்வோர்களின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என தெரிவித்தனர்.
காலை 11 மணி முதல் இரவு எட்டு மணி வரை தினமும் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் 50 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments