ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலகின் மாபெரும் புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் போட்டியான "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024"!!

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலகின் மாபெரும் புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரி மென்பொருள் போட்டியான "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024" நிகழ்வின் துவக்க விழா.

உலகின் மாபெரும் புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரி மென்பொருள் போட்டியான "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024" நிகழ்வின் இறுதிச்சுற்றின் துவக்க விழா டிசம்பர் 11 மற்றும் 12, 2024 தேதிகளில் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் விமர்சையாக நடைபெற உள்ளது.

இம்மாபெரும் புதுமை சிந்தனைகளை உருவாக்கும் நிகழ்வினை, ஒன்றிய கல்வி அமைச்சகம், அதன் கீழ் இயங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வியியல் கூட்டமைப்பு (ACITE), ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுக்கூடம் (MoE's Innovation Cell), கல்வி மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான புதுமைகள் கண்டுபிடிப்புகளுக்கான மையம் (i4C), எஸ் பி ஐ பவுண்டேசன், ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன். கோத்ரேஜ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டுடோரியல் பாயிண்ட் போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றது.

தமிழகத்தில் 7 ஒருங்கிணைப்பு மையங்களுள் ஒன்றாகவும், நாடு முழுவதும் உள்ள 51 ஒருங்கிணைப்பு மையங்களுள் ஒன்றாகவும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தொடர்சியாக 5ம் முறையாக இந்நிகழ்வினை நடத்த தெரிவு செய்ய படுவது கல்லூரிக்கும், கோயம்புத்தூர் மக்களுக்கும் கிடைத்த பெருமையாகும்.

"ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024" ன் இறுதிச்சுற்றின் துவக்க விழாவில், தலைமை விருந்தினராக டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ், கோயம்புத்தூர் விநியோக மைய தலைவர் திரு. செல்வகுமார் பாலசுப்பிரமணி அவர்களும், கௌரவ விருந்தினராக ஆர் வி எஸ் கல்விக்குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் திரு கே. செந்தில் கணேஷ் அவர்களும் கலந்து கொண்டு துவக்க விழா சிறப்புரையினை வழங்க உள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமாகிய திருமதி. எஸ். மலர்விழி அம்மையார் அவர்களும், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் திரு .கே. ஆதித்யா 

அவர்களும் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024"ன் இறுதிச்சுற்றின் துவக்கவிழாவில் உரையாற்ற உள்ளனர்.இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 மென்பொருள் வடிவமைப்பு போட்டிகளின் நிகழ்வில், புனே ஒருங்கிணைப்பு மையங்களில் தலைமை வகிக்கும் திருமதி. ஆகன்ஷா ஷஜல், திருமதி. வைஷ்ணவி கெய்க்வாட், மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்ப நிபுணர் திரு. எஸ். தனகோடி, ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தில் இருந்து திரு. அர்னாப் சாட்டர்ஜி மற்றும் கிரிஷ்னேந்து சவுத்ரி ஆகிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்வினை வழிநடத்த உள்ளனர்.

செய்யப்பட்ட மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் நாடு முழுவதும் உள்ள தெரிவு நடைபெறும் இந்த இறுதிச்சுற்று போட்டிகளில், 11000 க்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 1400 குழுக்களாக பிரிக்கப்பட்டு மென்பொருள் வடிவமைத்தலில் பங்கு பெற்றுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் 54 அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மென்பொருள்கள் உருவாக்கப் பட உள்ளன. 

ஸ்மார்ட் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, இணையவழி சேட்பாட், சுகாதார பராமரிப்பு மற்றும், உயிரியல் மருத்துவ உபகரணங்கள், விவசாயம் மற்றும் கிராமபுற வளர்ச்சி, ஸ்மார்ட் வாகனங்கள், உணவு தொழில்நுட்பம், ரோபாடிக்ஸ் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம், கழிவு மேலாண்மை, தூய நீர். புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்கள். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற துறைகளில் மென்பொருள்களை மாணவர்கள் வடிவமைக்க உள்ளனர்.

இந்த ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து 20 மாணவர் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவை நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் இறுதிச்சுற்றில் பங்கேற்கின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைப்பு மையத்தில், ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகம், பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் நான்கு கருத்துருக்களுக்கான மென்பொருள்கள் வடிவமைக்கப்பட உள்ளன.பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் டிசம்பர் 11, 2024 அன்று காணொலி காட்சி மூலம் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்" 2024 போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி உற்சாகப்படுத்த உள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமாகிய திருமதி. எஸ். மலர்விழி அம்மையார் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் திரு. கே. ஆதித்யா ஆகியோர் இம்மாபெரும் நிகழ்வினை சிறப்புற வழிநடத்தி வருகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் திரு. கே. பொற்குமாரன் அவர்களுடன் இணைந்து இந்நிகழ்வினை சிறப்புடன் நடந்திட பல்வேறு துறைகளைச் சார்ந்த டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் பங்காற்றி வருகின்றனர்.

-சீனி, போத்தனூர்.

Comments