கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல மாநாடு வரும் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விவாஹா மகால் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை உக்கடம் பகுதியில் உள்ள தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கொங்கு மண்டல தலைவர் ஜி.எம்.முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இதில் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருப்பூர் நீலகிரி கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டமைப்பின் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்,கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவரும்,தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து மாநாட்டு பொறுப்பாளர்களிடம் ஆலோசணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு பிரச்சனைகளுக்கு எளிமைப்படுத்த வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கை முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது விரைவில் அந்த திட்டங்கள் எளிமையாக்கப்படும் என தெரிவித்தார்.
குறிப்பாக,எல்லா தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதி திட்டத்தை விரிவு படுத்த வேண்டும், ஒவ்வொரு வாரியத்திற்கும் நிரந்தர நிதியாதாரம் உருவாக்க வேண்டும் என தொழிலாளர்கள் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளதாக கூறிய அவர்,விரைவில் தொழிலாளர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வரும் நம்பிக்கை தெரிவித்தார்.
எனவே தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்ற மாநாடாக நடைபெற உள்ள இதில் ஐயாயிரம் தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
கூட்டத்தில்,கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு நாகலிங்கம், பொருளாளர் ஆறுமுகம் துணைத் தலைவர் ராம வெங்கடேஷ் மற்றும் பாலகிருஷ்ணன்,நாகராஜ், கோவை மாவட்ட கூட்டமைப்பு தலைவர் சந்திரமோகன் செயலாளர் பர்வேஸ் திருப்பூர் மாவட்ட தலைவர் மணிவாசகம் செயலாளர் துரை, நீலகிரி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் ரிஷால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments