நுரையீரல்-சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு!!

கோவையில் தேசிய நுரையீரல் மருத்துவர்கள் கல்லூரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் நுரையீரல்-சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் தேசிய நுரையீரல் மருத்துவர்கள் கல்லூரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் நுரையீரல்-சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு 2024 (நாப்கான் 2024) இன்று முதல் 4 நாட்களுக்கு (நவம்பர் 21,22,23,24) பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.

அதிகரித்து வரும் சுவாசக் கோளாறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அவற்றை தடுப்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குறித்தும், காசநோய் தொடர்பான சிகிச்சையில் தற்போது ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில், 2,200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும்  இதில், வெளிநாட்டைச் சேர்ந்த 54 பேரும், தேசிய அளவில் 640 பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இம்மாநாட்டில், நுரையீரல் தொடர்பான தீவிர சிகிச்சை மற்றும் சுவாச  மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை உள்ளடக்கிய 9 அமர்வுகள் இடம்பெறுவதாகவும் இந்தத் துறையின் முன்னணி மருத்துவ நிபுணர்களின் 600 சொற்பொழிவுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ப்ரோன்கோஸ்கோபி மற்றும் பியூச்சரிஸ்டிக் ஆக்சிஜன் டெலிவரி முறைகள் உள்ளிட்ட அதிநவீன நுட்பங்களை அறிந்து கொள்ளும் விதமாக 14 பயிற்சி பட்டறைகளும் இந்த மாநாட்டில் இடம்பெறுகிறது. மேலும், சுவாச மருத்துவத்தில் சிறந்த பங்களிப்புகளுக்கான விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது. மருத்துவ சாதனங்கள், நோயறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்களின் கண்காட்சியும் இந்த மாநாட்டில் இடம்பெறுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments