புளியங்குடி லிகாய் சார்பில் எல்ஐசி முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

தென்காசி மாவட்டம் புளியங்குடி எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கமான லிகாய் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது கிளையின் கெளரவத்தலைவர் மூக்கையா தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் செயலாளர் சிகே.குமார், மாநில கல்விக்குழு உறுப்பினர் கணபதி, சுப்பிரமணியன், ராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊழியர் சங்க செயலாளர் ஹரிச்சந்திரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க செயலாளர் முருகன் ஆகியோர் வரவேற்று பேசினார். கூடுதல் செயலாளர் கணேசன் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி முகவர்களுக்கு 1956 -ம் ஆண்டு முதல் வழங்கி வந்த கமிஷனில் 7%  குறைத்து இருப்பதை கண்டித்தும் பாலிசிகளுக்கு பிடிக்கப்படும் ஜிஎஸ்டியை நீக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளையின் கௌரவத் தலைவர் மூக்கையா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் சி.கே.குமார், மாநில கல்வி குழு உறுப்பினர் கணபதி, முகவர்கள் ஜெபாஸ்டின், சுப்பிரமணியன், ராஜு ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து எல்ஐசி ஊழியர்கள் சங்க செயலாளர் ஹரிச்சந்திரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க செயலாளர் முருகன், கூடுதல் செயலாளர் முருகன் வரவேற்று பேசினார்.

இதனை தொடர்ந்து கோரிக்கை வலியுரித்தி லிகாய் சங்க முகவர்கள் சார்பில் வருகின்ற பிப்ரவரி மாதம் 11-ம் தேதி டெல்லி  நாடாளுமன்றம் முன்பு ஒரு லட்சம் முகவர்களை  திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். தொடர்ந்து முகவர் கணபதி நன்றி தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தென்காசி மாவட்ட செய்தியாளர்

-திருமலை குமார்.

Comments