வாள் வீச்சு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது!!வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் (Fencing)  எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக வாள் வீச்சு போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியோர் இணைந்து  மாநில  அளவிலான  வாள் வீச்சு   விளையாட்டு  போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார்  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி,தலைவர் சுப்பையா தனசேகரன்  மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக  ரங்கராஜன் நரசிம்ஹன்,மற்றும் ரமணா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே நடைபெற்ற  போட்டிகளில், சென்னை,கோவை,திருச்சி,மதுரை,கன்னியாகுமரி,நாமக்கல்,சேலம்,தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஜூனியர் மற்றும் சீனியர் என பிரிவுகளில் ஃபாயில், சேபர், எப்பி  ஆகிய மூன்று பிரிவின் கீழ்,  போட்டிகள் நடைபெற்றன.

முதல் நாளில் சுமார் நூறு பேர் பங்கேற்ற நிலையில் வாளை ஆவேசமாக வீரர்,வீராங்கனைகள் சுழற்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்ப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கருணாமூர்த்தி மற்றும்  தியாகு நாகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் நிர்வாகிகள் சிவமுருகன்,அரவிந்த் உட்பட உறுப்பினர்கள் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments