கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு அமெரிக்கா எஸ்.ஆர்.சி அங்கீகாரம்!!

நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாக இந்திய அளவில் சிறந்த மருத்துவமனையாக  கோவை ராயல் கேர் மருத்துவ மனைக்கு அமெரிக்கா எஸ்.ஆர்.சி அங்கீகாரம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை அளிப்பதில் இந்திய அளவில் சிறந்த மருத்துவமனை என்ற அங்கீகாரத்தை அமெரிக்கா நாட்டை சேர்ந்த  எஸ்.ஆர்.சி.வழங்கி கவுரவித்துள்ளது.   

கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உயர்தர மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக  சர்வதேச அளவில்  உயர்தர சுகாதார சேவைகளை வழங்கி வரும் நிலையில் அண்மையில் ஜே.சி.ஐ.அங்கீகாரம் பெற்ற ராயல் கேர் மருத்துவமனை சர்வதேச  மருத்துவமனைகளின் வரிசையில் இணைந்தது.

இந்நிலையில் தற்போது மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான   சர்வதேச பராமரிப்பு தரங்களை ஆய்வு செய்த அமெரிக்கா எஸ்.ஆர்.சி.ராயல் கேர் மருத்துவமனைக்கு சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளனர்.

உலக அளவில் ஏழாவது மையமாகவும்,இந்திய அளவில் முதல் மருத்துவமனையாகவும் இந்த அங்கீகாரத்தை பெற்ற  ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான  டாக்டர் மாதேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார்..

அப்போது பேசிய அவர்,யு.எஸ்.ஏ - சர்ஜிகல் ரிவியூ கார்ப்பரேஷனின் எஸ்.ஆர்.சி அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர்,நரம்பியல் அறுவை சிகிச்சையில் நோயாளியின் பாதிப்புகளை விரைவாக கண்டறிந்து சிகிச்சையை வேகமாக வழங்குவது அவசியம் என குறிப்பிட்ட அவர்,இதில் ராயல் கேர் மருத்துவமனையின் சிறந்த வேகமான செயல்பாட்டின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பார்கின்சன் நோய் எனப்படும் நரம்பியல் சார்ந்த  மூளை தொடர்பான  நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் ராயல் கேர் மருத்துவமனையில் மிக அதி நவீன தொழில் நுட்ப உபகரணம் பயன்படுத்துவதாக கூறிய அவர்,இதனால் கத்தியின்றி தலையில் எந்த விதமான துளைகள்,கீறல்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக கூறினார்.

இந்தியாவிலேயே முதல் மருத்துவமனையாக இந்த தொழில் நுட்பத்தை உபயோகபடுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர்,இது வரை இந்த நவீன தொழில் நுட்பத்தில் நூறுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக கூறினார்.

இந்த சந்திப்பின் போது, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. ரகுராஜ பிரகாஷ் மற்றும்டாக்டர்.ஆர்.செந்தில்குமார்,மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி,தலைமை செயல்அலுவலர் டாக்டர் மணி செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சீனி, போத்தனூர்.

Comments