கோவை காளப்பட்டி சந்திரா மாரி சர்வதேச பள்ளி இரண்டாவது ஆண்டு விளையாட்டு போட்டி!!

"விளையாட்டு துறையில் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் சேவையை முதன்முதலாக சி எம் ஐ எஸ் பள்ளியில் தொடங்கியுள்ளோம்", தாளாளர் சுமதி முரளி குமார் தகவல்.

கோவை காளப்பட்டி சந்திரா மாரி சர்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் ஒலிம்பிக் போட்டியில் வென்ற தேசிய அத்தலடிக் வீராங்கனை ரேவதி, தேசிய சாப்ட்டு பால் வீரர் நந்தகுமார் பள்ளியின் தலைவர் முரளி குமார் தாளாளர் சுமதி முரளி குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விஜய் சந்துரு. கௌதம் சந்துரு முதல்வர் விஷால் பண்டாரி ஆகியோர் பங்கேற்றனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி தொடங்கிய விளையாட்டு போட்டியில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினார் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை பதக்கம் வழங்கி பள்ளியின் தலைவர் முரளி குமார் பாராட்டி கௌரவித்தார்.

விளையாட்டு விழா குறித்து பள்ளியின் தாளாளர் சுமதி முரளி குமார் இயக்குனர் டாக்டர் விஜய் சந்துரு  பேசியதாவது,

மாணவ மாணவிகளிடம் கல்வியைத் தாண்டி அவர்களிடம் உள்ள திறமைகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் மாணவ செல்வங்களை  தயார் படுத்துவதற்காக தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஒலிம்பிக் வீரர்களை வரவழைத்து ரோல் மாடலாக மாணவ மாணவிகளை விளையாட்டில் தனித்தன்மை பெற தயார் படுத்தி வருகிறோம்.

மேலும் குழந்தைகளின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து கிரிக்கெட் அணி வீரர்களாக எட்டு அணிகள் உருவாக்கி உள்ளோம் மாணவர்களும் பெற்றோர்களும் தனித்திறமை வெளிப்படுத்த சந்திர மாரி பள்ளி ஒரு சிறந்த களமாக திகழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தேசிய அத்தலடிக் வீர ரேவதி சாப்ட் பால் வீரர் நந்தகுமார் ஆகியோர் பேசும்போது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது நாங்கள் தென் மாவட்டத்தை சார்ந்தவர்கள் தான் எங்களது தனித்தன்மையை ஊக்கப்படுத்தியதால் ஒலிம்பிக் போட்டிகளில் நாங்கள் பங்கேற்பதற்கு உறுதுணையாக இருந்தது நாங்கள் பெற்ற அனுபவத்தை வருங்கால குழந்தைகளுக்கும் அறியச் செய்ய வேண்டும் என்று கோவை சந்திரமாரி பள்ளியில் மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்திட எங்களது அனுபவங்களை பகிர்ந்து உள்ளோம்.

-சீனி, போத்தனூர்.

Comments