தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது வெற்றி!!
முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நேற்று, மூன்றாவது போட்டி செஞ்சுரியனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன் எடுத்தது. திலக் (107 ரன், 56 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி),ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் இந்தியா 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments