கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஃப்ளை ஹாலிடேஸ்(Fly Holidays) சுற்றுலா நிறுவனம் துவக்கம்!!

சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளின் தேர்வுகளில்  முன்னனி நிறுவனமான ஃப்ளை ஹாலிடேஸ் (Fly Holidays) தனது புதுப்பிக்கப்பட்ட கிளையை கோவையில் துவங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்திய அளவில் சுற்றுலா செல்ல வரும்புவர்களுக்கான முன்னணி  டூர் ஆபரேட்டரான ஃப்ளை ஹாலிடேஸ் கோவை சித்தாபுதூர் சரோஜினி சாலையில் துவங்கி உள்ளது.

இதற்கான துவக்க விழா ஃப்ளை ஹாலிடேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜே.பி.என்கிற ஜெயபிரகாஷ்,மற்றும்இணை நிர்வாக இயக்குனர் ஜெயதேவ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஒடிசா மாநிலம் கோராபுட்   ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி கீர்த்தி வாசன் ஐ.ஏ.எஸ்.,கோவை மாவட்ட  சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி.பிரிவு காவல் துறை எஸ்.பி. பாலாஜி சரவணன் ஐ.பி.எஸ்., சி. எஸ். அகாடமி செயல் இயக்குனர் டாக்டர் சித்தாரா விக்ரம்,துளசி பார்மசி நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுப்பிக்கப்பட்ட புதிய ஃப்ளை ஹாலிடேஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பொது மேலாளர் ஹரி பிரசாத் பேசுகையில்,

கோவை  வாசிகளுக்கு  தனித்துவமான சுற்றுலா  விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் மறக்க முடியாத பயண அனுபவங்களை எங்கள் நிறுவனம்  வழங்க உள்ளதாக நம்பிக்கை தெரிவித்த அவர்,ஷீரடி,

வாரணாசி,அயோத்தியா  போன்ற ஆன்மீக சுற்றுலா பயணத்திற்கு தீபாவளியை முன்னட்டு  சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் தாய்லாந்து, ஐரோப்பா போன்ற சர்வதேச சுற்றுலா பேக்கேஜுகள் நல்ல தரமான வசதிகளுடன் குறைந்த விலையில் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் பேக்கேஜுகள் குழு மற்றும் தனி என வெவ்வேறு பட்ஜெட்டுகளில் பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப வசதி செய்து தருவதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments