லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி என்.ஆர்.ஐ. மகாத்மா காந்தி லீடர்ஷிப் விருது!!


5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் குமார் சின்ராஜ் அவர்களுக்கு வழங்கி கவுரவிப்பு. கோவையை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் கார்த்திக் குமார் சின்ராஜ். 5 கே கார் கேர் நிறுவனம் எனும் கார் டீடெய்லிங் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் தென்னிந்தியா முழுவதும் 200 க்கும் மேற்பட்ட கிளைகளை நடத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார்.

இந்நிலையில், அர்ப்பணிப்பு, வேலை வாய்ப்பு வழங்குவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் தனி கவனம்  என பல்வேறு தனி மனித தலைமை பண்பு அடிப்படையில் வழங்கப்படும் விருதான, லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி என்.ஆர்.ஐ. மகாத்மா காந்தி தலைமைத்துவ விருது 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனரான   இளம் தொழில் முனைவோர் கார்த்திக் குமார் சின்ராஜிற்கு  வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும்  நிகழ்ச்சியில் விருதை பெற்று கொண்ட கார்த்திக் குமார் கோவை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,தமது 5 கே கார் கேர் எனும் நிறுவனத்தின் வாயிலாக மிக குறைந்த காலத்தில்  இளைஞர்களுக்கு குறிப்பாக முதல் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள்,பெண்கள்  ஆகியோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக கூறிய அவர்,தொழில் வாய்ப்புகளை வளர்ப்பதோடு சமூக நலன்  சார்ந்த பணிகளில் தான் மட்டுமின்றி தமது ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார். சரியான நேரத்தில் தமக்கு உயரிய விருது வழங்கியது தமக்கு பெருமை அளிப்பதாக கூறிய அவர்,இதனால் சமூக நலன் சார்ந்த பொறுப்புகள் தமக்கு இன்னும் அதிகரித்துள்ளதாக கூறினார்.

மேலும்,இந்த ஆண்டு  மகாத்மா காந்தி லீடர்ஷிப் விருதை பெற்றதில் தமிழராக தாம் பெருமை படுவதாக பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக லண்டனில் இருந்து கோவை திரும்பிய அவருக்கு 5 கே கார் கேர் நிறுவன  ஊழியர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

-சீனி, போத்தனூர்.

Comments