பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த முப்பெரும் விழா!!

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு வகையான சமுதாய பணிகளை தொடர்ந்து பல வருடங்களாக செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுடன் மதநல்லிணக்க தீபாவளி கொண்டாட்டம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா,1000-அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிரந்தர நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா, என முப்பெரும் விழாவாக கோவை செளரிபாளையம் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.M.கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலட்சிய துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் திரு G .தினேஷ்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். செளரிபாளையம் அரசு பொது நூலகத்தின் நூலகர் லட்சுமணசாமி , கத்தோலிக்க தேவாங்க நல சங்கத்தின் செயலாளர் பாபு M கென்னடி, மகாலட்சுமி திருக்கோவில் செயலாளர் N.சண்முகசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தனர் . கோவை மாநகராட்சி 51-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்சவேணி மணிகண்டன் .D.மகாலட்சுமி, L.சண்முகப்பிரியா, கலைச்செல்வி குணாளராஜன், உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்கள். 

ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள்,பட்டாசுகள்,அரிசி, மளிகைப்பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய மதநல்லிணக்க தீபாவளி நலத்திட்ட உதவிகளை கோவை மாநகராட்சி 86-வார்டு மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர், கோவை ஓம் கார தியான பீடம் நிறுவனர் திரு.சித்த ஸ்ரீ ஈசன் குருஜி,பர்கத் பாஷா, மருத்துவர் சபரி சுரேஷ், கோவை ஜமாத் இ இஸ்லாமிக் ஹிந்த் செயலாளர் M.அப்துல் ஹக்கீம், இஸ்லாமிய புத்தக நிலையம் A.ஜக்கரியா, தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ K.இஸ்மாயில் பாஷா,Fb கேக் சிவகுமார், அருள் குமார் உள்ளிட்டோர் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.சமூகத்தில் பல்வேறு வகையான சமுதாய பணிகளை தொடர்ந்து செய்து வரும் சாதனையாளர்களுக்கு விருதுகளை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை வட்டாட்சியர் த.லட்சுமி நாராயணன் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

1000-அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நூலகத்தில் கல்வி பயில நிரந்தர நூலக உறுப்பினர் அட்டைகளை Lions club of cbe the grand தலைவர் F.அகஸ்டின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேதிகா தேநீரகம் நிறுவனர் கருணாநிதி, கொங்கு K.வடிவேல்,சுரேஷ்குமார்,மாசானிக் கிரானைட்ஸ் கனகராஜ்,முகேஷ்,L.மனோஜ், அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை G.செல்வராஜ், பத்மப்ரியா,மதுரா புண்ணிய அறக்கட்டளை S.R மாணிக்கம், சரவணக்குமார், சுர்ஜித் குமார், ராஜா சவுண்ட் சர்வீஸ் N.கார்த்திகேயன்,Equitas bank S.கணேசன்,Sகுமார பாளையம் குகன் கேட்டரிங் G.சங்கர், இன்ஜினியர் P.சுரேஷ்குமார், ஜாவித், குருபிரசாத், தேவராஜ், தருமபுரி சிறு உழவன் பா.பவண், சஞ்சீவ், அம்மன் இண்டஸ்ட்ரீஸ் A.விக்னேஷ்குமார், டீனா ஏஜன்சிஸ் ச.பிரபு என்கிற ஜார்ஜ் லாரன்ஸ், சாய் கேட்டரிங் தனலட்சுமி, வலசப்பாளையம் செந்தில் குமார் திலகவதி, பரமக்குடி வேல்முருகன்,ஜசக் மதன், ஆரோக்கிய பீட்டர்,m.பாலசுப்ரமணியம், நிசார் சேட்,நிர்மல் குமார்,V.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நூலகர் G.மரிய டெய்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை காந்தி நகர் நாகராஜ், சரவணன் தமிழரசன் ஹரிஹரன் சுஜன் ராகேஷ் மணி பாரதி மதன் பாலா வெற்றி M.G.கன்ஷிகா,M.g.மோஹிதா ஸ்ரீ இலட்சிய துளி ரெக்ஸ் ரஞ்சித்  அந்தோனி பிரதீப் அசோக் லியாண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் A.t.K scan centre சார்பாக பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சர்க்கரை இரத்த அழுத்தம் உடல் எடை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments