சுவாமி தரிசன கட்டணம் தொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசன கட்டணம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, "கோயில்களில் சாமி தரிசனத்துக்கு ரூ.1,000, ரூ.2,000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments