தவா டிரக்ஸ் மார்ட் வளாகத்தில் மில்க்கி மிஸ்ட் டெய்ரி ஷாப்!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பால் மற்றும் அது தொடர்பான பொருட்கள் விற்பனையில் தென்னிந்திய அளவில் முன்னனி நிறுவனமாக மில்க்கி மிஸ்ட் செயல்பட்டு வருகின்றது.
பால் பொருட்கள் மட்டுமின்றி பீட்சா,சீஸ் பொருட்கள்,ரசகுல்லா,ரசமலாய், போன்ற உணவு பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் மில்க்கி மிஸ்ட்,தனது விற்பனை சந்தையை விரிவாக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பிரத்யேக நேரடி விற்பனை மையங்களை துவக்கி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் ஒரு பகுதியாக கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தவா டிரக்ஸ் மார்ட் வளாகத்தில் தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவக்கியுள்ளது.
இதற்கான துவக்க விழாவில்,கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி.பழனிசாமி,செயல் இயக்குனர் அருண் பழனிசாமி, மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார்,இயக்குனர் அனிதா,தலைமை செயல் அதிகாரி ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய விற்பனை மையத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து முதல் விற்பனையை கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிசாமி துவக்கி வைத்தார்.
ஏற்கனவே மருந்து வாங்க வருபவர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் மேற்கத்திய பாணியில் இந்த தவா டிரக்ஸ் மார்ட் வணிக வளாகத்தை செயல்படுத்தி வருவதாகவும்,தற்போது இங்கு வரும் வாடிக்கையாளர்கள் ரிலாக்ஸாக ஓய்வெடுத்து மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லும் வகையில், இந்த மில்க்கி மிஸ்ட் விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஷ் குமார்,இந்த நவீன வகை பார்லரில், பனீர், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி, நெய், லஸ்ஸி, கிரீம், பாயாசம் உறைந்த பீட்சா,புரோட்டா, மற்றும் மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் அசல் எனும் பிராண்டின் புட்டு பொடி,பாயசம் மிக்ஸ்,மற்றும் ஸ்மார்ட் செஃப் பிராண்டின் பனீர் பிங்கர், க்ரஞ்சர்ஸ்,சீஸ் பால்ஸ்,மற்றும் கேபல்லா பிராண்ட் ஐஸ் க்ரீம் என அனைத்து வகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவடுவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தவா டிரக்ஸ் மார்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் சந்திர சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments