ஷாலோம் மருத்துவ கல்வி அறக்கட்டளை சார்பாக வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா!!


வெளிநாட்டில் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு  உதவும் வகையி்ல்  ஷாலோம் கல்வி நிறுவனம் ரஷ்யா,ஜெர்மன், யூரோப் என பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய மாணவர்கள் மருத்துவ கல்வியை குறைந்த கட்டணத்தில் பயில்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றனர்.

தொடர்ந்து பதினைந்து வருடங்களாக இந்த பணியை செய்து வரும் ஷாலோம் கல்வி நிறுவனத்தின் வாயிலாக  2024-25 கல்வி ஆண்டில் கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவ கல்வி பயில சேர்க்கை பெற்ற மாணவர்கள் சுமார் 40 பேரை வழியனுப்பும் விழா மற்றும் அவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஷாலோம் நிறுவனத்தின் இயக்குனர்  அனிதா காமராஜ் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக  கே.எம்.சி.எச். மருத்துவமனையின்  பிரபல மருத்துவரும் சிறந்த பேச்சாளருமான டாக்டர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை மற்றும் மினி லேப்டாப், புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து, ஷாலோம் நிறுவனத்தின் இயக்குனர் அனிதா காமராஜ், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில்  பெரும்பாலான மாணவர்களின்  மருத்துவ கனவு, அவர்களின் கல்வி, பொருளாதாரம் போன்ற பல்வேறு காரணங்களால் இங்கு மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்படுவதால், அது போன்ற  மாணவர்களுக்கு அவர்களின் மனம் சோர்ந்து விடாமல் அவர்களின் கனவை நிறைவேற்றும் உன்னத நோக்கோடு 15 வருடங்களாக வெளி நாடுகளில் மருத்துவ கல்வி பயில சரியான வழிகாட்டுதலை சேவை மனப்பாங்குடன் செய்து வருவதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயில் விரும்பும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு அதை பற்றிய பயமும், சரியான புரிதலும் இல்லாமல் உள்ளது. அவர்களின் பயத்தை போக்கி மாணவர்களின் மதிப்பெண் மற்றும் பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சரியான கல்லூரியை தேர்ந்தெடுப்பது முதல் 6 வருடங்கள் மாணவர்கள் கல்வி முடித்து முழுமையான மருத்துவராகும் வரை அவர்களுக்கு ஷாலோம் நிறுவனம் உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் ரூ.40,000 மதிப்பிலான கம்ப்யூட்டர்,மற்றும்  புத்தகங்கள் வழங்கப்பட்டன. உதவித்தொகை பெற்ற மாணவ மாணவர்கள் கோவையிலிருந்து விமானம் மூலம் கிர்கிஸ்தான் நாட்டிற்கு மருத்துவ கல்வி பயில செல்வது குறிப்பிடதக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments