ஸ்மார்ட் கம்ப்யூட்டர் லேப்பை ஓரியன் இன்னோவேஷன் தொடங்கி உள்ளது!!

 

கோவை: அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கம்ப்யூட்டர் லேப்பை ஓரியன் இன்னோவேஷன் தொடங்கி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டம் உடையாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி மேநிலைப்பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு ஓரியன் இன்னோவேஷன் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் லேப்பை ஓரியன் இன்னோவேஷன் தொடங்கி வைத்துள்ளது.வசதியற்ற சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் (CSR) முன்னெடுப்பான "Ol Empower" என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மாணவர்களுக்கான கற்றல் சூழ்நிலைகளை மேம்படுத்துவதும் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் வெற்றி பெறுவதற்கான அத்தியாவசியத் திறன்களை வழங்குகிறது.இந்த அரசு பள்ளியில் ஒரு புதிய கணினி ஆய்வகத்தை தொடங்கி உள்ளது. 

பள்ளியில் கணினி ஆய்வக தொடக்கவிழாவின் போது ஓரியன் இன்னோவேஷன் மனிதவள துறை தலைவர் அருண் பால் பேசுகையில்: பள்ளியில் பயிலும் வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள்

தொழில்நுட்பத்தால் கணினி ஆய்வகத்தை தொடங்கி வைத்துள்ளதாகவும் சமுதாயத்தின் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி அதன் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் ஓரியன் இன்னோவேஷன் அர்ப்பணிப்பு செய்து உள்ளதாக கூறினார்.

ஓரியன் இன்னோவேஷன் நிறுவனத்தின் துணை தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில்:STEM பாடத்திட்டங்களையும் மற்றும் வாழ்க்கை திறன்களையும் வார இறுதி நாட்களில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தன்னார்வ பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள் என்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறந்த முறையில் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments